தள்ளாத வயதிலும் பாதுகாப்பு உடை அணிந்து தபால் வாக்கு போட்ட மூதாட்டி

0 925
தள்ளாத வயதிலும் பாதுகாப்பு உடை அணிந்து தபால் வாக்கு போட்ட மூதாட்டி

அமெரிக்காவில் சிகாகோ நகரைச் சேர்ந்த 102 வயது மூதாட்டி ஒருவர் உடல் முழுவதும் பாதுகாப்பு உடை அணிந்து தபால் வாக்கு போடும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 

Bea Lumpkin என்ற பெயர் கொண்ட அந்த மூதாட்டி சிகாகோ ஆசிரியர் சங்கத்தின் ஓய்வு பெற்ற உறுப்பினர் ஆவார்.

இவர் அதிபர் தேர்தலில் தள்ளாத வயதிலும் தளராமல் வந்து தபால் மூலம் வாக்களிக்கும் காட்சியை ஆசிரியர் சங்கம் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பேசிய அந்த மூதாட்டி, தன்னுடைய வாழ்நாளில் இதுவரை எந்த தேர்தலையும் தவற விட்டதில்லை என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments