விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி..!

0 19517

தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட விஜயகாந்த் சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து, அண்மையில் வீடு திரும்பினார். இந்நிலையில், அவர் மீண்டும் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுதொடர்பாக, தேமுதிக வெளியிட்டுள்ள அறிக்கையில், 2ம் கட்ட பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விஜயகாந்த் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்றும், அவர் நலமுடன் இருப்பதால் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments