தேனி தொகுதி எம்.பி. ரவீந்திரநாத்குமார் மீதான தேர்தல் வழக்கு அக்டோபர் 16ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

0 1226
தேனி தொகுதி எம்.பி. ரவீந்திரநாத்குமார் மீதான தேர்தல் வழக்கு அக்டோபர் 16ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி தேனி தொகுதி அதிமுக எம்.பி. ரவீந்திரநாத்குமார் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை, சென்னை உயர் நீதிமன்றம், அக்டோபர் 16ம் தேதி தள்ளிவைத்துள்ளது.

மக்களவை தேர்தலில் எம்.பி. ரவீந்திரநாத்குமார் பணம் கொடுத்து வெற்றி பெற்றார் என்றும் அதனால் அவரது வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும் கூறி மிலானி என்பவர் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அதனை விசாரணைக்கு உகந்ததல்ல எனக் கூறி நிராகரிக்குமாறு எம்.பி. ரவீந்திரநாத்குமார் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி, தீர்ப்பை அக்டோபர் 16ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments