தமிழ்நாட்டில், தனியார் பள்ளிகளில் RTE பிரிவின் கீழ் மாணவர் சேர்க்கை அக்.12ஆம் தேதி தொடக்கம்

0 4550
தமிழ்நாட்டில், தனியார் பள்ளிகளில் RTE பிரிவின் கீழ் மாணவர் சேர்க்கை அக்.12ஆம் தேதி தொடக்கம்

தமிழ்நாட்டில், தனியார் பள்ளிகளில், RTE எனப்படும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், 2ஆம் கட்ட மாணவர் சேர்க்கை, வருகிற 12ஆம் தேதி தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக, அத்துறையின் செயலாளர் தீரஜ்குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், RTE பிரிவின் கீழ், முதற்கட்ட மாணவர் சேர்க்கை கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் செப்டம்பர் 25ஆம் தேதி வரை நடைபெற்றதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு லட்சத்து 15 ஆயிரம் இடங்களுக்கு, விண்ணப்பம் செய்த 86 ஆயிரம் பேருக்கு, குலுக்கல் முறையில், கடந்த ஒன்றாம் தேதி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

அதுபோக, RTE பிரிவின் கீழ், எஞ்சியுள்ள இடங்களுக்கு, வருகிற 12ஆம் தேதி தொடங்கி, நவம்பர் 7ஆம் தேதி வரையில், 2ஆம் கட்ட மாணவர் சேர்க்கை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments