ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி துவக்க ஆட்டக்காரர் கார் விபத்தில் பலி

0 1799
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி துவக்க ஆட்டக்காரர் கார் விபத்தில் பலி

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி தொடக்க ஆட்டக்காரர் நஜீப் தரகாய் ( Najeeb Tarakai) கார் விபத்தில் உயிரிழந்தார்.

அதிரடி பேட்ஸ்மேனான அவர், கடந்த 2ம் தேதி நேரிட்ட  விபத்தில் பலத்த காயமடைந்தார்.

இதையடுத்து   சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்து விட்டதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

29 வயதான நஜீப், 12 டி20 கிரிக்கெட் போட்டிகள், ஒரு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடியுள்ளார்.

இதுதவிர முதல்தர போட்டிகளில் விளையாடி 6 சதங்களை விளாசியுள்ளார்.

இதில் ஒரு இரட்டை சதமும் அடங்கும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments