சென்னையில் தலைமை காவலர் குடும்பத்துக்கு சக காவலர்கள் ரூ.25 லட்சம் நிதி

0 1985
சென்னையில் தலைமை காவலர் குடும்பத்துக்கு சக காவலர்கள் ரூ.25 லட்சம் நிதி

சென்னையில் உடல்நலக்குறைவால் இறந்த தலைமைக் காவலரின் குடும்பத்திற்கு, சக காவலர்கள் திரட்டிய 25 லட்சம் ரூபாய் நிதியை, காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் வழங்கினார்.

ஜெ.ஜெ.நகர் காவல்நிலையத்தில் பணிபுரிந்து வந்த தலைமைக் காவலர் சரவணக்குமார், சிறுநீரக குறைபாட்டால் கடந்த ஆகஸ்ட் மாதம் உயிரிழந்தார்.

இந்த நிலையின் அவரின் மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகளுக்கு உதவும் பொருட்டு, சரவணக்குமாருடன் 2003 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த சுமார் 5 ஆயிரம் காவலர்கள், தமிழகம் முழுவதும் செல்போன் செயலி மூலம் இணைந்து 25 லட்சம் ரூபாய் நிதி திரட்டி வழங்கி உள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments