ஹாரி பாட்டர் தொடரையொட்டிய புதிய புத்தகம் வெளியீடு

0 985
ஹாரி பாட்டர் தொடரையொட்டிய புதிய புத்தகம் வெளியீடு

ஹாரி பாட்டர் தொடரையொட்டிய புதிய புத்தகத்தை வெளியிடும் பொருட்டு, இங்கிலாந்தை சுற்றியுள்ள 11 இடங்கள், க்விடிச் விளையாட்டு சிறப்பு பதாகைகளுடன் கவுரவிக்கப்பட்டன.

பறக்கும் துடைப்பத்தில் அமர்ந்தபடியே பந்தை எடுத்துச் சென்று வளையத்தில் போட்டு கோல் சேர்க்கும் க்விடிச் விளையாட்டு, ஹாரி பாட்டர் நாவல்களில் பிரபலமானது.

இதை 2005 ஆம் ஆண்டில் நிஜ வாழ்க்கையில் அமெரிக்க கல்லூரி மாணவர்கள் அறிமுகப்படுத்திய நிலையில், உலகம் முழுவதும் அதிக ரசிகர்களை கொண்டுள்ளது.

இந்த விளையாட்டு தொடர்பாக ஜே.கே.ரவுலிங் எழுதிய புத்தகம், வெவ்வேறு இடங்களில் ரசிகர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments