மருத்துவ மேற்படிப்பு பயில்வோர் அரசு மருத்துவமனைகளில் கட்டாயம் 2 ஆண்டு பணிபுரிய வேண்டும் என்ற தமிழக அரசு உத்தரவு செல்லும்: உயர்நீதிமன்றம்

0 1129
மருத்துவ மேற்படிப்புகளில் அகில இந்திய இடஒதுக்கீட்டில் பயிலும் மாணவ - மாணவிகள், 2 ஆண்டுகள் அரசு மருத்துவமனைகளில் கட்டாயம் பணிபுரிய வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவு செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறக்கூடிய மருத்துவ கல்லூரிகளில், அகில இந்திய இடஒதுக்கீட்டின்கீழ் பயில்வோர், படிப்பு முடித்தவுடன் 2 ஆண்டுகள் கட்டாயம் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும் என்பது நிபந்தனை.

இதை எதிர்த்து, 276 பேர் தொடர்ந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, அந்த உத்தரவு செல்லாது என்று உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments