வெப்பச்சலனம் காரணமாக 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

0 1593

வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் சேலம், நீலகிரி, கோவை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காராணமாக சேலம், கிருஷ்ணகிரி, நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 9ம் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி அதற்கு அடுத்த 24 மணி நேரத்தில் அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்பதால், ஆழ்கடல் பகுதியில் இருக்கும் மீனவர்கள் 8ம் தேதிக்குள் கரை திரும்புமாறு  அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments