கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் வீட்டில் சோதனை நடத்தியது ஏன் - சி.பி.ஐ. விளக்கம்

0 1633

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், 74 கோடியே 93 லட்சத்துக்கு சட்டவிரோதமாக சொத்து சேர்த்ததாக கிடைத்த ஆதாரத்தின் அடிப்படையில் அவர் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தியதாக சிபிஐ விளக்கம் அளித்துள்ளது.

பெங்களூருவில் டி.கே.சிவக்குமாரின் வீடு, அலுவலகம் என 14 இடங்களில் நேற்று சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், அரசியல் காரணங்களுக்காக இந்த ரெய்டு நடத்தப்பட்டதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது.

இந்த நிலையில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததால் டி.கே.சிவக்குமார் மீது வழக்குப்பதிவு செய்து மாநில அரசு அனுமதியுடன் சோதனை நடத்தியதாக சிபிஐ விளக்கமளித்துள்ளது. ரெய்டில் ரூபாய் 57 லட்சம் பணம், சொத்து பத்திரங்கள், ஹார்டு டிஸ்க் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் சிபிஐ தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments