வழக்கறிஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கு- ஒரு பெண் உட்பட 7 பேரிடம் போலிசார் தீவிர விசாரணை

0 5791

சென்னை வில்லிவாக்கத்தில் வழக்கறிஞர் 18 முறை தலையில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒரு பெண் உட்பட 7 பேரிடம் போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வியாசர்பாடியை சேர்ந்த வழக்கறிஞர் ராஜேஷ் நேற்று வில்லிவாக்கத்தில் உள்ள வீட்டின் அருகே நின்றுக் கொண்டிருந்த பொழுது அந்த வழியாக வந்த 8 பேர் கொண்ட கும்பல் சுற்றி வளைத்து தலையில் வெட்டியுள்ளனர். அதில் பலத்த படுகாயமடைந்த ராஜேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த கொலை தொடர்பாக சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார் 4 தனிப்படைகளை அமைத்து   விசாரணை மேற்கொண்டனர். அதில் சந்தேகத்திற்கு இடமான ஒரு பெண் உட்பட 7 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments