வெனிஸ் நகரில் கடந்த 1200 ஆண்டுகளில் முதன்முறையாக வெள்ளத்தடுப்பு அமைப்பு செயல்பாட்டுக்கு வந்துள்ளது

0 908
வெனிஸ் நகரில் கடந்த 1200 ஆண்டுகளில் முதன்முறையாக வெள்ளத்தடுப்பு அமைப்பு செயல்பாட்டுக்கு வந்துள்ளது

இத்தாலியில் உள்ள வெனிஸ் நகரில் கடந்த ஆயிரத்து 200 ஆண்டுகளில் முதன்முறையாக வெள்ளத்தடுப்பு அமைப்பு செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

அந்த நகரில் ஒவ்வொரு ஆண்டும் உயர் அலைகளால் அந்நகரில் பெரும்பாலான பகுதிகள் நீரில் மூழ்கி விடுவது வழக்கம். கடந்த ஆண்டு நவம்பரில் 187 சென்டிமீட்டர் மழை பதிவானதால் 90 விழுக்காடு நகரம் வெள்ளத்தில் மூழ்கியது.

இந்நிலையில் மோஸ் எனப்படும் வெள்ளத்தடுப்புத் திட்டத்தை செயல்படுத்த அந்நாட்டு அரசு 1984 முதல் முயற்சி செய்து வருகிறது. ஆனால் 2013ல் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் ஊழல் முறைகேடு தொடர்பாக தாமதமானது.

தற்போது அந்தத் திட்டத்தில் 78 இடங்களில் வெள்ளத் தடுப்பு அமைப்பு பணிகள் முடிவடைந்துள்ளதால் 1200 ஆண்டுகளாக நீருக்குள் மூழ்கிய பகுதிகள் தற்போது மூழ்குவது தடுக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments