பலாத்காரத்திற்குள்ளான பெண்ணின் படத்தை வெளியிட்ட காங்கிரஸ் - தி.க – பா.ஜ.க..!

0 9558
பலாத்காரத்திற்குள்ளான பெண்ணின் படத்தை வெளியிட்ட காங்கிரஸ் - தி.க – பா.ஜ.க..!

பலாத்காரத்திற்குள்ளான பெண்களின் பெயரையோ படத்தையோ பொது வெளியில் வெளியிடுவது தண்டனைக்குரிய குற்றம் என்ற நிலையில் ஆர்ப்பாட்டம் மற்றும் கண்டன சுவரொட்டிகளில் சில அரசியல்கட்சியினர் பாதிக்கப்பட்ட பெண்ணின் படத்தை பெயருடன் வெளியிட்டு வருகின்றனர்.

ஹாத்ராஸ் பலாத்கார சம்பவத்தை கண்டித்து இந்தியா முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர் போராடி வருகின்றனர்.

இந்த நிலையில் அரசியல் கட்சியினர் தங்கள் எதிர்ப்புகளை காட்டுவதற்காக ஒட்டப்பட்டும் சுவரொட்டிகளிலும், கட்டப்படும் பேனர்களிலும், கையில் பிடித்திருக்கும் பதாகைகளிலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் படத்தையும் பெயரையும் வெளியிட்டு வருகின்றனர்.

இது அப்பட்டமான சட்டவிதிமீறல் என்றும் மேலும் தண்டனைக்குரிய குற்றம் என்று சுட்டிக்காட்டும் சட்ட வல்லுனர்கள், பாதிக்கப்பட்ட பெண்ணின் படத்தையோ, பெயரையோ அடையாளப்படுத்தக் கூடாது என்பதை மறந்து அரசியல் கட்சியினர் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக சுட்டிக்காட்டியுள்ளனர்

சென்னையில் காங்கிரஸ் சார்பில் நடந்த சத்தியாகிரக அறவழி அமர்வில் பங்கேற்ற தொண்டர்கள் முதல் தலைவர்கள் வரை அனைவரது கையிலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் படம் அச்சிடப்பட்ட பதாகைகள் இருந்தது. எப்போதும் தன்னை பெண்ணுரிமை போராளியாக காட்டிக் கொள்ளும் குஷ்புவின் கைகளிலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் படத்துடன் பதாகை இருந்ததுதான் வேதனை

கன்னியாகுமரி மாவட்ட பாரதீய ஜனதா கட்சியினரும் காங்கிரஸிற்கு குறைவில்லாமல் பாதிக்கப்பட்ட பெண்ணின் படத்தையும் பெயரையும் குறிப்பிட்டு போஸ்டர் அடித்து வீதி வீதியாக ஒட்டியுள்ளனர்

பகுத்தறிவு சிந்தனை மிக்கவர்களாகவும், பெண்ணுரிமை போராட்டத்தின் முகவரியாகவும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்கின்ற திராவிடர் கழக மகளிரனி ஒரு படி மேலே போய், தங்கள் போராட்ட பேனரில் பாதிக்கப்பட்ட பெண்ணின் படத்துடன் பெயரையும் அச்சிட்டு தங்கள் பங்கிற்கு சட்ட விதியை மீறியுள்ளனர். இது குறித்து விளக்கம் அளித்த தி.க. மகளிரனி தலைவர் சூரியகலா, எல்லோருக்கும் தெரியும் என்பதால் பாதிக்கப்பட்ட பெண்ணின் படத்தை அச்சிட்டதாக தெரிவித்தார்

ஹாத்ராஸ் பலாத்கார சம்பவத்தை கண்டித்து போராட்டம் நடத்துவது தவறில்லை, அதில் பாதிக்கப்பட்ட பெண்ணின் படத்தையும், பெயரையும் பயன்படுத்துவது அந்த பெண்ணை மேலும் இழிவுபடுத்தும் செயல் என்பதை இந்த அரசியல் கட்சியினர் எப்போது உணரபோகின்றனர் என்பதே சமூக ஆர்வலர்களின் கேள்வியாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments