தேர்வு எழுதாமல் மாணவர்களின் கற்றல் தகுதியை எவ்வாறு தீர்மானிக்கிறீர்கள்..? உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி

0 5364
தேர்வு எழுதாமல் மாணவர்களின் கற்றல் தகுதியை எவ்வாறு தீர்மானிக்கிறீர்கள் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

தேர்வு எழுதாமல் மாணவர்களின் கற்றல் தகுதியை எவ்வாறு தீர்மானிக்கிறீர்கள் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நித்தியானந்தன் என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில், 2015 - 2019ஆம் ஆண்டில் PSNA கல்லூரியில் பொறியியல் முடித்து 14 அரியர்கள் வைத்திருந்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.

கடந்த மே மாதம் அவற்றுக்கான அரியர் தேர்வு எழுத கட்டணம் செலுத்தியிருந்ததாகவும் ஆனால் தேர்வு எழுதுவதற்கான மின்னஞ்சல் தமக்கு வரவில்லை என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி, "தேர்வுக்கட்டணம் செலுத்தினாலே, தேர்ச்சி என அரசு அறிவித்திருக்கும் நிலையில், கட்டணம் செலுத்தி, தேர்வெழுத அனுமதி கேட்பவரை அனுமதிப்பதில் என்ன சிரமம் என கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து தேர்வு எழுதாமல் மாணவர்களின் கற்றல் தகுதியை எவ்வாறு தீர்மானிக்கிறீர்கள்? என கேள்வி எழுப்பிய நீதிபதி இது குறித்து, அண்ணா பல்கலைக்கழகம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments