தலையில் 18 வெட்டு சிதைத்து நாற்காலியில் வைத்த கொலை கும்பல்..!

0 5575
சென்னை வில்லிவாக்கத்தில் வழக்கறிஞரை வெட்டிக் கொன்ற கொலையாளிகள் தலையில் மட்டும் 18 முறை வெட்டி நாற்காளியில் அமர வைத்து விட்டு சென்றுள்ளனர். கொலையாளிகள் தப்பிச் சென்ற சிசிடிவி வெளியாகி உள்ள நிலையில், 4 தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை வில்லிவாக்கத்தில் வழக்கறிஞரை வெட்டிக் கொன்ற கொலையாளிகள் தலையில் மட்டும் 18 முறை வெட்டி நாற்காளியில் அமர வைத்து விட்டு சென்றுள்ளனர். கொலையாளிகள் தப்பிச் சென்ற சிசிடிவி வெளியாகி உள்ள நிலையில், 4 தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் 45 வயதான வழக்கறிஞர் ராஜேஷ். எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞரான அவர் நேற்றிரவு வில்லிவாக்கத்தில் வாடகைக்கு வசித்து வந்த வீட்டின் அருகே கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். தனது பிறந்த நாளை முன்னிட்டு, அவர் நடத்தி வந்த "மக்கள் ஆளும் அரசியல்" எனும் கட்சி சார்பிலான கால்பந்து போட்டியை தொடங்கி வைத்து, பின்னர் பரிசு வழங்கிவிட்டு, இரவு வில்லிவாக்கம் திரும்பியுள்ளார்.

நேற்றிரவு ஐ.பி.எல் கிரிக்கெட்டில் சென்னை அணி விளையாடியதால் எப்போதும் இவருடன் இருக்கும் ஆதரவாளர்கள் யாரும் இல்லை எனக் கூறப்படுகிறது. இதனால் வியாசர்பாடியில் இருந்து அவரை பின் தொடர்ந்த 8 பேர் கொண்ட கும்பல், தனது வீட்டிற்கு எதிரே ராஜேஷ் பேசிக் கொண்டிருந்த போது சுற்றி வளைத்து தாக்கியுள்ளனர். உடலில் வேறு எங்கும் காயம் ஏற்படுத்தாமல் தலையில் மட்டும் 18 முறை வெட்டி சிதைத்து கொன்ற கும்பல் அதே இடத்தில் நாற்காலியில் அமர்ந்த நிலையில் சடலத்தை வைத்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

கொலை செய்யப்பட்ட வழக்கறிஞர் ராஜேஷ் கடந்த 2015-ம் ஆண்டு எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் நடந்த வழக்கறிஞர் ஸ்டாலின் கொலை வழக்கில் தொடர்புடையவர் என குறிப்பிடும் போலீசார், மேலும் கட்டப்பஞ்சாயத்து விவகாரத்தில் சில பிரபல ரவுடிகளின் விரோதத்தையும் பெற்றிருந்ததாக கூறுகின்றனர்.

வழக்கறிஞர் ராஜேஷ் தனக்கு அச்சுறுத்தல் இருந்ததால் உரிமம் பெற்ற துப்பாக்கி வைத்திருப்பார் என கூறப்படுகிறது. கொலை நடந்த போது காரில் துப்பாக்கியை வைத்து விட்டு, தனது நண்பர் கோகுல் என்பவரிடம் வழக்கமாக பேசும் இடத்தில் பேசிக்கொண்டிருக்கும் போது சம்பவம் நடந்துள்ளதாக கூறுகின்றனர். வழக்கறிஞரை கொலை செய்த கும்பல், தப்பி ஓடிய கண்காணிப்பு கேமிரா காட்சிகள் வெளியாகி உள்ளன.

கொலை கும்பல் சென்ற வழியில் இருந்த 10 -ற்கும் மேற்பட்ட சிசிடிவி பதிவுகளை கைப்பற்றியுள்ள போலீசார், 4 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தேடும் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments