ஸ்ரீநகரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 2 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம்

0 1452
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் இன்று நடத்திய திடீர் தாக்குதலில் 2 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணமடைந்தனர்.

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் இன்று நடத்திய திடீர் தாக்குதலில் 2 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணமடைந்தனர்.

ஸ்ரீநகரிலுள்ள பாம்போர் பைபாஸ் சாலையில் புதிய சாலை திறக்கும் நிகழ்ச்சி இன்று மதியம் 12.30 மணியளவில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதில் சிஆர்பிஎப் வீரர்கள், போலீசார் ஆகியோர் கலந்து கொண்டிருந்த நிலையில், அங்கு திடீரென வந்த பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதில் 5 சிஆர்பிஎப் வீரர்கள் காயமடைந்த நிலையில், அவர்களில் 2 பேர் பின்னர் வீரமரணமடைந்தனர். தாக்குதலை அடுத்து, அப்பகுதியை பாதுகாப்புப் படையினர் சீலிட்டு பயங்கரவாதிகளை தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments