பெண் வேடமிட்டு பெண்களை மயக்கிய மன்மத இளைஞர்...! பணம் பறித்த வழக்கில் கைது

0 12156
பெண் வேடமிட்டு பெண்களை மயக்கிய மன்மத இளைஞர்...! பணம் பறித்த வழக்கில் கைது

சென்னையில் பெண் தொழில் அதிபரிடம் பெண் போல பழகி அந்தரங்க விவகாரங்களை தெரிந்து கொண்டு மிரட்டி பணம் பறித்த இளைஞரை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

சென்னை முகப்பேர் பகுதியில் கார்களுக்கு காப்பீடு வழங்கும் நிறுவனத்தை தொழில் அதிபர் தம்பதியர் நடத்தி வந்தனர். இவர்களது காப்பீட்டு நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிந்து வந்த ரத்தினக்குமார் என்பவன், பெண்களின் செல்போன் எண்ணை வாங்கி வைத்துக் கொண்டு அவர்களுடன் அந்தரங்கமாக பேசுவதை வாடிக்கையாக வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

அந்தவகையில் ரத்தினகுமாரிடம் தொழில் அதிபரின் மனைவி திருமணத்திற்கு முன்பு தனக்கு வேறொரு இளைஞருடன் ஏற்பட்ட காதல் குறித்து பகிர்ந்துள்ளார். இதனை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட ரத்தினக்குமார் பிளாக்மெயில் செய்துள்ளான்.

இதை கணவரிடம் சொல்லி விடுவதாக பெண் தொழில் அதிபரை மிரட்டிய ரத்தினக்குமார், அவரை ஆடையின்றி புகைப்படம் எடுத்து வாட்ஸ் ஆப்பில் அனுப்ப கூறியுள்ளான்.

ரத்தினக்குமாரின் மிரட்டலுக்கு பயந்து அந்த பெண்ணும் புகைப்படங்களை அனுப்பி வைத்துள்ளார். பின்னர் அந்த புகைப்படங்களை காட்டி ஆசைக்கு இணங்குமாறு மிரட்டியுள்ளான். அதற்கு மறுத்ததால் லட்சக்கணக்கில் பணம் பறித்துள்ளான் ரத்தினக்குமார்.

ஒரு கட்டத்தில் பணம் அதிக அளவு கேட்டு மிரட்டியதால், பிளாக்மெயிலர் ரத்தினக்குமாரிடம் தான் சிக்கி இருக்கும் தகவலை கணவரிடம் தெரிவித்து கண்ணீர் விட்டு கதறியுள்ளார் அந்தப் பெண்.

இதையடுத்து தன்னுடைய நண்பர்கள் உதவியுடன் ரத்தினக்குமாரை பிடித்த தொழிலதிபர், தனது மனைவியின் படம் இருந்த செல்போனை கைப்பற்றிய போது அதில் இருந்த மற்ற புகைப்படங்களைக் கண்டு அதிர்ந்து போனார்.

அதில் ரத்தினக்குமார் பல பெண்களுடன் பெண் வேடமிட்டு இருந்தான். இது குறித்து விசாரித்த போது சில பெண்கள் , அவர்களைப் போலவே ஆடை அணிந்து கொள்ளும் ஆண்களிடம் நெருங்கிப் பழகுவார்கள் என்றும் அந்தரங்க விவகாரங்களை கூச்சமின்றி பகிர்ந்து கொள்வார்கள் என்பதற்காக தான் பெண் போல வேடமிட்டதாக கூறியுள்ளான்

இதையடுத்து பிளாக்மெயிலர் ரத்தினக்குமாரை ஆதாரத்துடன் பிடித்து கடந்த மாதம் ஒன்றாம் தேதி திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

ஆனால் தனது செல்வாக்கினால் போலீசாரிடம் இருந்து தப்பிய பிளாக்மெயிலர் ரத்தினக்குமாரை தகுந்த ஆதாரத்தின் அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை பிடித்து மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரத்தினகுமாரால் ஏமாற்றப்பட்டு பணம் பறி கொடுத்த பெண்கள் புகார் அளிக்கலாம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பெண்கள் மூன்றாவது நபரிடம் தங்கள் அந்தரங்க விவகாரங்களை பகிர்ந்து கொண்டால் என்ன மாதிரியான விபரீதம் ஏற்படும் என்பதற்கு சாட்சியாக நடந்திருக்கிறது இந்த பிளாக் மெயில் சம்பவம்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments