மேற்குவங்கத்தில் பாஜக நிர்வாகி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: முதலமைச்சர் மம்தா பானர்ஜி மீது ஆளுநர் தாங்கர் குற்றச்சாட்டு

0 707
மேற்குவங்கத்தில் பாஜக நிர்வாகி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: முதலமைச்சர் மம்தா பானர்ஜி மீது ஆளுநர் தாங்கர் குற்றச்சாட்டு

மேற்குவங்கத்தில் பாஜக நிர்வாகி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து உடனடியாக தன்னிடம் பேசும்படி நேற்றிரவு தான் அனுப்பிய செய்தியை முதலமைச்சர் மம்தா பானர்ஜி நிராகரித்து விட்டதாக ஆளுநர் ஜெகதீப் தாங்கர் குற்றம்சாட்டியுள்ளார்.

வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில்  பாஜக நிர்வாகி மணிஷ் சுக்லா என்பவர் மர்ம நபர்களால் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதனை தொடர்ந்து சட்டம்-ஒழுங்கு நிலை குறித்தும், அரசியல் கொலைகள் குறித்தும் பேச மாநில உள்துறை செயலர், டிஜிபி ஆகியோரை தொடர்பு கொண்டதாகவும், ஆனால் இருவரும் பேசாததால், முதலமைச்சருக்கு இரவு 10.47 மணிக்கு உடனடியாக பேச விரும்புவதாக செய்தி அனுப்பியதாகவும், அதற்கு அவரும் பதிலளிக்காமல் அமைதியாக இருந்துவிட்டார் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments