பதவி போட்டியில் விஜய் சேதுபதி ரசிகர் மன்ற தலைவர் வெட்டிக்கொலை - புதுச்சேரியில் அதிர்ச்சி சம்பவம்!

0 13699

பதவிப் போட்டியில் விஜய் சேதுபதி ரசிகர் மன்ற தலைவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் புதுச்சேரியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மாநில விஜய் சேதுபதி ரசிகர் மன்றத்தின் தலைவராக இருந்தவர் மணிகண்டன். இவர், நேற்றிரவு 11 மணியவில் இருசக்கர வாகனத்தில் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள தன் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தார். அப்போது, நெல்லித்தோப்பு சந்தையருகே, 3 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை வழிமறித்து சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பியோடியது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உருளையன்பேட்டை போலீசார் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த மணிகண்டனை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே மணிகண்டன் உயிரழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

கொலை வழக்குப் பதிவு செய்த உருளையன்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் மணிகண்டனுக்கும் அவரின் உறவினரான ஆட்டுப்பாட்டியைச் சார்ந்த ராஜசேகர் என்பவருக்கும் ரசிகர் மன்றத்தில் தலைவர் பதவியை யார் வகிப்பது என்பது குறித்து பிரச்னை இருந்துள்ளது. இதனால், ராஜசேகர் விஜய் சேதுபாதிக்காக தனியாக ரசிகர் மன்றம் நடத்தி வருகிறார். ஆனால் ராஜசேகர் மன்றத்துக்கு அனுமதி கிடைக்கவில்லை. மணிகண்டன் மன்றத்துக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நேற்று இருவரையும் சமாதானப்படுத்த நண்பர்கள் முயன்றனர். அப்போது, ராஜசேகர் தலைவர் பதவியை கேட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு மணிகண்டன் ஒத்துக் கொள்ளாமல் அவர்களை மிரட்டிவிட்டு சென்றதாக சொல்லப்படுகிறது. இதனால், மணிகண்டனை ராஜசேகர் தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து வெட்டிப் படுகொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளார்.

தற்போது, ராஜசேகர் உட்பட 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments