ஆந்திராவில் இரு வேறு பள்ளிகளைச் சேர்ந்த 27 மாணவர்களுக்கு கொரோனா தொற்று

0 1619
ஆந்திராவில் இரு வேறு பள்ளிகளைச் சேர்ந்த 27 மாணவர்களுக்கு கொரோனா தொற்று

ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் இரண்டு பள்ளிகளில் 27 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெற்றோர்கள் அனுமதியுடன் இரு வேறு பள்ளிகளில் நடந்த முறைசாரா வகுப்புகளில் மாணவர்கள் பங்கேற்ற நிலையில், அவர்களில் 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளைச் சேர்ந்த 27 மாணவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

வெவ்வேறு கிராமங்களைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு அறிகுறிகள் இல்லாத நிலையில், அவர்களுடன் தொடர்பில் இருந்த பெற்றோர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments