மெக்சிகோவில் காமா புயல் காரணமாக 5 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தகவல்

0 408
மெக்சிகோவில் காமா புயல் காரணமாக 5 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தகவல்

மெக்சிகோவில் காமா(Gamma) புயல் காரணமாக 5 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நடப்பாண்டில் அட்லாண்டிக் பெருங்கடலில் உருவான 24வது புயலான காமாவால், மெக்சிகோவின் யுகடன் தீபகற்பத்தில் சூறைக்காற்று வீசியதுடன், கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.

மேலும், சியாபாஸ் என்ற இடத்தில் பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு வீடு புதைந்ததில் 2 குழந்தைகள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.

தபாஸ்கோ மாநிலத்தில் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டு ஒருவர் உயிரிழந்ததாக குறிப்பிட்டுள்ள அதிகாரிகள், ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments