தவளையை உயிருடன் பிடித்து உண்ட ஹண்ட்ஸ்மென் சிலந்தி

0 97
தவளையை உயிருடன் பிடித்து உண்ட ஹண்ட்ஸ்மென் சிலந்தி

மேற்கு வங்கத்தில் வீட்டுக்குள் பதுங்கியிருந்த மிகப் பெரிய சிலந்தி ஒன்று தவளையை தூக்கிச் சென்ற வீடியோ வெளியாகி உள்ளது.

ஜல்பைகுரி என்ற இடத்தில் சுஜய் ஷா என்பவர் தனது வீட்டு குளியலறைக்குச் சென்ற போது, அங்கு உலகின் மிகப் பெரிய சிலந்திகளில் ஒன்றான ஹன்ட்ஸ்மென் சிலந்தியைக் கண்டார்.

அதன் வாய் பகுதியைக் கூர்ந்து கவனித்த போது, சிறிய தவளையை அந்தச் சிலந்தி பிடித்திருந்தது தெரியவந்தது.

சிறிது நேரத்தில் தவளையை அந்தச் சிலந்தி தின்று தீர்த்தது.

3 சென்டிமீட்டர் நீளம் உடலமைப்பு கொண்ட ஹண்ட்ஸ்மென் சிலந்தி தனது ஒரு அடி நீளமுள்ள கால்களால் இரையை இலகுவாகப் பிடிக்கும் தன்மை கொண்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments