புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் பள்ளிகள் திறப்பு... 8ம் தேதி முதல் வகுப்புகள் தொடக்கம்

0 13110
புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் பள்ளிகள் திறப்பு... 8ம் தேதி முதல் வகுப்புகள் தொடக்கம்

புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், வரும் 8ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும்.

இன்று முதல் 7ம் தேதி வரை வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டு, தனிநபர் இடைவெளியுடன் இருக்கைகள் அமைக்கப்படவுள்ளன. வாரத்தில் 6 நாட்களுக்கு காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே வகுப்புகள் நடைபெறும்.

9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் சந்தேகங்களை தீர்த்து கொள்ள விருப்பத்தின் பேரில் பெற்றோர் அனுமதியுடன் பள்ளிக்கு வரலாம். திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில், 9, 11ம் வகுப்பு மாணவர்களுக்கும், செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கும் வகுப்புகள் நடத்தப்படவுள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments