எல்லைத் தகராறு காரணமாக ஆர்மீனியா, அஸர்பைஜான் இடையே போர்: அப்பாவி பொதுமக்கள் உயிரிழப்பு

0 2388
எல்லைத் தகராறு காரணமாக ஆர்மீனியா, அஸர்பைஜான் இடையே போர்: அப்பாவி பொதுமக்கள் உயிரிழப்பு

வட ஆசிய நாடுகளான அஸர்பைஜான், ஆர்மீனியா இடையே நடக்கும் போர் உச்சகட்டத்தை அடைந்துள்ளது.

இருநாட்டுத் தாக்குதல்களிலும் அப்பாவி பொதுமக்கள் பலியாவது தொடர்கிறது.

அஸர்பைஜான், ஆர்மீனிய நாடுகளுக்கு இடையே உள்ள நாகர்னோ, காரபாக் பகுதிகளுக்கு இருநாடுகளும் சொந்தம் கொண்டாடி வரும் வேளையில் கடந்த சில நாட்களுக்கு முன் போர் வெடித்தது.

இரு நாடுகளும் ராக்கெட் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியதில் ஏராளமான வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் நாகோர்னோ-கராபாக் பிராந்தியத்தில் அஸர்பைஜான் நடத்திய தாக்குதலில் பொதுமக்களில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஏராளமான வீடுகளும் ஏவுகணைத் தாக்குதல்,அங்கு வீட்டினை இழந்த ஒருவர் தனது தாயாரை தோளில் தூக்கிச் சென்று காப்பாற்றியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

முன்னதாக நேற்று அஜர்பைஜானின் 2வது முக்கிய நகரமான காஞ்சா(Ganja) மீது ஆர்மீனியா ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் ஒருவர் கொல்லப்பட்டதாக வெளியான தகவலை ஆர்மீனியா மறுத்துள்ளது.

இந்த நிலையில், அஜர்பைஜானுக்கு கராபாக் சொந்தமானது என்று அந்நாட்டு அதிபர் இல்ஹாம் அலியேவ் சமூக வலைதளங்களில் பதிவிட்டதையடுத்து பொதுமக்கள் வீதிகளில் இறங்கி கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments