இந்திய-பசிபிக் பகுதியில் சீனா சட்டவிரோத நடவடிக்கை குறித்து, 4 நாடுகள் சந்திப்பில் விவாதிக்க உள்ளதாக தகவல்

0 1311
இந்திய-பசிபிக் பகுதியில் சீனா சட்டவிரோத நடவடிக்கை குறித்து, விரைவில் நடக்கவுள்ள 4 நாடுகள் சந்திப்பில் விவாதிக்க உள்ளதாக தகவல்

இந்திய-பசிபிக் பகுதியில் சீனா சட்டவிரோத நடவடிக்கைளில் ஈடுபட்டு வரும் நிலையில், விரைவில் நடக்கவுள்ள நான்கு நாடுகள் சந்திப்பில், அதை தடுப்பது குறித்து இந்தியா, ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகியன விவாதிக்க உள்ளன.

இந்திய-பசிபிக் பிராந்தியம் மட்டுமின்றி, யூரோஏசியா பகுதியிலும் தனது ராணுவ-பொருளாதார வலிமையை காட்டி ஆதிக்கம் செலுத்த சீனா முயன்று வருகிறது.

இந்த நிலையில் சீனாவின் ராணுவ-பொருளாதார திட்டங்களுக்கு மூக்கணாங்கயிறு போடும் நடவடிக்கைகள் குறித்து நான்கு நாடுகள் சந்திப்பில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments