தமிழ்நாட்டில் இன்று 5489 பேருக்கு கொரோனா உறுதி

0 2721
தமிழ்நாட்டில் இன்று 5489 பேருக்கு கொரோனா உறுதி

தமிழ்நாட்டில் மேலும் 5 ஆயிரத்து 489 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 லட்சத்து 20 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.

வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 5 ஆயிரத்து 558 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

சென்னையில் 12 பேர் உள்பட வைரஸ் தொற்றுக்கு ஒரே நாளில் 66 பேர் உயிரிழந்தனர்.

ராமநாதபுரத்தில் 23 வயது இளைஞர் ஒருவர், கொரோனாவுக்கு பலியானார்.

சென்னையில் ஒரே நாளில் ஆயிரத்து 348 பேருக்கும், கோவையில் புதிதாக 474  பேருக்கும், செங்கல்பட்டில் மேலும் 381 பேருக்கும் ,தஞ்சாவூரில் 242 பேருக்கும் , திருவள்ளூரில் புதிதாக 197 பேருக்கும் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments