பொருளாதார வழித்தடத் திட்டத்தை நிறைவேற்ற சீனா நெருக்குதல் கொடுப்பதால் ஜில்ஜித் பல்திஸ்தானைத் தனி மாகாணமாக இணைத்துக்கொள்ளப் பாகிஸ்தான் நடவடிக்கை

0 4256
சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத் திட்டத்தை நிறைவேற்ற நெருக்குதல்: சீனாவின் நெருக்குதலால் ஜில்ஜித் பல்திஸ்தானைத் தனிமாநிலமாக அறிவிக்க நடவடிக்கை

பொருளாதார வழித்தடத் திட்டத்தை நிறைவு செய்வதற்காகச் சீனா நெருக்குதல் கொடுப்பதால் ஜில்ஜித் பல்திஸ்தானைத் தனி மாகாணமாக இணைத்துக்கொள்ளப் பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஆக்கிரமிப்புக் காஷ்மீரில் உள்ள ஜில்ஜித் பல்திஸ்தானைத் தன்னாட்சிப் பகுதியாகப் பாகிஸ்தான் வைத்துள்ளது. சீனா - பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் இதன்வழியாகச் செல்வதால் அதைப் பாகிஸ்தானுடன் இணைந்த பகுதியாக அறிவிக்கக் கோரிச் சீனா வலியுறுத்தி வருகிறது.

இதையடுத்து அதைத் தனி மாகாணமாக அறிவிக்க முடிவு செய்துள்ளதாகக் காஷ்மீர் விவகாரங்களுக்கான பாகிஸ்தான் அமைச்சர் அலி அமீன் கந்தப்பூர் தெரிவித்துள்ளார். ஜில்ஜித் பல்திஸ்தானுக்குப் பிரதமர் இம்ரான்கான் விரைவில் செல்ல இருப்பதாகவும், அப்போது தனி மாநிலமாக முறைப்படி அறிவிப்பார் எனவும் அவர் தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments