பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் சார்பில் டிராக்டர் பேரணி…புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொடரும் போராட்டங்கள்!

பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் சார்பில் டிராக்டர் பேரணி…புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொடரும் போராட்டங்கள்!
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாபில் நடைபெற்ற டிராக்டர் பேரணியில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி கலந்துகொண்டார்.
பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் புதிய வேளாண் சட்டத்திற்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதேபோல் காங்கிரஸ் கட்சி சார்பில் பஞ்சாப் மாநிலம் பாத்னி கலான் பகுதியில் இருந்து ஜட்புரா பகுதி வரை நடைபெற்ற டிராக்டர் பேரணியில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, பஞ்சாப் முதலமைச்சர் அம்ரிந்தர் சிங், அம்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் சுனில் ஜகார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Comments