சென்னை பெரம்பூரில் வீட்டு அருகே கேட் அமைப்பதில் இருதரப்பினரிடையே தகராறு: சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் அண்ணன், தம்பி உள்ளிட்ட 4 பேர் கைது

0 1218
சென்னை பெரம்பூரில் வீட்டு அருகே கேட் அமைப்பதில் இருதரப்பினரிடையே தகராறு: சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் அண்ணன், தம்பி உள்ளிட்ட 4 பேர் கைது

சென்னை பெரம்பூரில் வீட்டு அருகே கேட் அமைக்கும் தகராறில் 2 பேர் கடுமையாக தாக்கப்பட்ட சம்பவத்தில் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதிமுக பிரமுகரான சந்துரு என்ற ராமசந்திரனுக்கும், காயத்ரி என்பவருக்கும் தகராறு இருந்து வந்ததாகவும், போலீசார் சமாதானம் பேச அழைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், காயத்ரி தனது வீட்டில் மருமகன் கிருஷ்ணகுமார், ராஜசேகர் உள்ளிட்டோருடன் பேசி கொண்டிருந்தபோது ராமசந்திரன், அவருடைய தம்பியும் திமுக நிர்வாகியுமான தனசேகர் உள்ளிட்ட சுமார் 15 பேர் வீடு புகுந்து அரிவாள், கத்தியால் தாக்கியதாக சொல்லப்படுகிறது.

இதில் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட 2 பேர் காயமடைந்த நிலையில், ராமசந்திரன், தனசேகர் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments