ஹத்ராசில் படுகொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினருக்கு, சிபிஐ விசாரணையில் விருப்பமில்லை என தகவல்

0 3483
ஹத்ராசில் படுகொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினருக்கு, சிபிஐ விசாரணையில் விருப்பமில்லை என தகவல்

ஹத்ராசில் 19 வயதான தலித் பெண் பாலியல் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டாம் என அந்தப் பெண்ணின் குடும்பத்தார் தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது.

கடந்த 14 ஆம் தேதி 4  நபர்களால் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு, கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்ட பெண் கடந்த செவ்வாய்க்கிழமை டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இந்த சம்பவத்திற்கு நாடு தழுவிய அளவில் பெரும் கண்டனம் எழுந்துள்ள நிலையில்  சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுவதாக உத்தரப் பிரதேச முதலமைச்சர் ஆதித்யநாத் அறிவித்தார்.

இந்த நிலையில், மாநில அரசு அமைத்துள்ள சிறப்பு புலனாய்வு குழுவினர், ஹத்ராஸ் மாவட்டம் Boolgarhi  கிராமத்தில் சம்பந்தப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர்.

அப்போது சிபிஐ விசாரணைக்கு மறுப்பு தெரிவித்த குடும்பத்தினர், நீதித்துறை விசாரணை நடத்துமாறு கேட்டுக் கொண்டதாக சிறப்பு புலனாய்வுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.   

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments