ரூ. 250 கோடி மதிப்பீட்டில் கூடுவாஞ்சேரி - பரனூர் இடையே 8 வழிச்சாலைத் திட்டத்துக்குத் தமிழக அரசு ஒப்புதல்

0 5498
ரூ. 250 கோடி மதிப்பீட்டில் கூடுவாஞ்சேரி - பரனூர் இடையே 8 வழிச்சாலைத் திட்டத்துக்குத் தமிழக அரசு ஒப்புதல்

கூடுவாஞ்சேரி - பரனூர் இடையே 8 வழிச்சாலையாக விரிவுபடுத்தும் திட்டத்துக்குத் தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளதால் முதற்கட்டப் பணிகள் தொடங்கியுள்ளன.

தமிழகத்தின் முப்பது மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் தெற்கு நுழைவாயிலாக உள்ள    தாம்பரம் - செங்கல்பட்டு இடையிலான சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ளதால் அதை 8 வழிச்சாலையாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

முதற்கட்டமாகப் பெருங்களத்தூர் முதல் கூடுவாஞ்சேரி வரையுள்ள பகுதியில் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளதால், அடுத்த கட்டமாகக் கூடுவாஞ்சேரி முதல் பரனூர் வரையிலான 13 கிலோமீட்டர் நீளத்துக்கு 8 வழிச்சாலையாக விரிவாக்கப்பட உள்ளது.

250 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான இந்தத் திட்டத்துக்குத் தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதையடுத்துச் சாலைப் பணிக்காக மின்கம்பங்களை இடமாற்றுவது குறித்து மின்வாரியத்துடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டுள்ளது.

8 வழிச்சாலைப் பணிகளை முடிக்க ஓராண்டு ஆகும் என நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments