மகாராஷ்ட்ராவில் நாளை முதல் உணவகங்கள், பார்களுக்கு அனுமதி

0 803
மகாராஷ்ட்ராவில் நாளை முதல் உணவகங்கள், பார்களுக்கு அனுமதி

மகாராஷ்ட்ராவில் நாளை முதல் உணவகங்கள், பார்கள் திறக்கப்பட உள்ளன.

அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி உணவகங்களில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.

வாடிக்கையாளர்கள் உணவகத்திற்கு உள் செல்வதற்கு முன் அவர்களுக்கு தெர்மல் கருவி மூலம் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட வேண்டும்.

சாப்பிடும் நேரம் தவிர மற்ற சமயங்களில் வாடிக்கையாளர்கள் முகக் கவசம்அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். முடிந்த வரை டிஜிட்டல் முறையில் வாடிக்கையாளர்களிடம் பணம் பெறவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேபோல உணவகத்திற்குள் வாடிக்கையாளர்கள் உள்ளே வரவும், வெளியே செல்லவும் தனித்தனி பாதைகள் இருக்க வேண்டும் எனவும், உணவகத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களும் செயல்பாட்டில் இருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. .

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments