குறைந்த விலையில் மட்டன் பிரியாணி; அலைமோதும் கூட்டம்

0 34771
குறைந்த விலையில் மட்டன் பிரியாணி; அலைமோதும் கூட்டம்

கர்நாடக மாநிலம் ஒசக்கோட்டையில் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படும் மட்டன் பிரியாணியை, அசைவ பிரியர்கள் சுமார் 2 கி.மீ தூரம் வரை நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கி சென்றனர்.

இப்பகுதியில் சுமார் 10க்கும் மேற்பட்ட பிரியாணி கடைகள் இயங்கி வருகிறது. இங்கு தமிழக சுவையில் தயாராகும் பிரியாணி அதிகாலை 4 மணி முதல் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் இந்த பகுதியில் பெங்களூரிலிருந்து கோலார் கே.ஜி.எஃப், பங்காருபேட்டை, சித்தூர், சென்னை ஆகிய பகுதிகளுக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையும் அமைந்துள்ளதால், இவ்வழியாக செல்லும் பயணிகளும் இங்கு பிரியாணி வாங்கி சுவைக்கின்றனர்.

பிற பகுதிகளில் மட்டன் பிரியாணி 300 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் நிலையில், இங்குள்ள கடைகளில் 150 ரூபாய்க்கு மட்டன் பிரியாணியும், 50 ரூபாய்க்கு ஆட்டுக்கால் பாயாவும் விற்பனை செய்யப்படுவதே கூட்டம் அலைமோத காரணமாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments