மழை வேண்டி ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோத திருவிழா

0 1971
மழை வேண்டி ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோத திருவிழா

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோத திருவிழாவில், மழை வேண்டி 50க்கும் மேற்பட்ட ஆடுகளை பலியிட்டு நேர்த்திக்கடன் நிறைவேற்றப்பட்டது.

முதல்நாடு கிராமத்தில் கடந்த 3 தலைமுறைகளுக்கும் மேலாக, ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தின் 2வது வாரத்தில் எல்லை பிடாரி அம்மன் கோவிலில்  ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில் தற்போதும் மழை வேண்டியும், நல்ல மகசூல் வேண்டியும் காட்டுப்பகுதியில் நள்ளிரவில் திருவிழா நடைபெற்றது.

அதில் 50க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டு நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டதோடு, பச்சரிசி சாதம் சமைத்து அம்மனுக்கு படையலிடப்பட்டது. அதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டு படையல் உணவை பங்கிட்டு உண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments