மகாராஷ்ட்ராவில் அடுத்தடுத்து இருவேறு இடங்களில் பயங்கரத் தீ விபத்து

0 689
மகாராஷ்ட்ராவில் அடுத்தடுத்து இருவேறு இடங்களில் பயங்கரத் தீ விபத்து

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் இருவேறு இடங்களில் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது.

பால்கர் பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் நேற்றிரவு தீ பரவியது. தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டு வர பல மணி நேரம் போராடினர்.

இதே போன்று மும்பையை அடுத்த பிவண்டியின் தாபோடா பகுதியில் உள்ள ஒரு பிளாஸ்டிக் கிடங்கிலும் தீப்பிடித்தது. தீ வேகமாகப் பரவியதில் பக்கத்தில் இருந்த மின்னணு சாதன கிடங்கும் எரிந்து சாம்பலானது.

இதில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகின. கடும் போராட்டத்துக்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இரவு நேரம் என்பதால் இரு தீ விபத்துகளிலும் யாருக்கும் காயம் ஏதுமில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments