வடக்கு ஆசிய நாடுகளான அஸர்பைஜான் - ஆர்மீனியா இடையிலான போர் தீவிரம்

0 2254
வடக்கு ஆசிய நாடுகளான அஸர்பைஜான் - ஆர்மீனியா இடையிலான போர் தீவிரம்

வடக்கு ஆசிய நாடுகளான அஸர்பைஜான் மற்றும் ஆர்மீனியா இடையே நடக்கும் போர் தீவிரமடைந்துள்ளதால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.

அஸர்பைஜான் மற்றும் ஆர்மீனியா நாடுகளுக்கு இடையே உள்ள நாகோர்னோ-கராபாக் பகுதி மீது உரிமை கோரி இருநாடுகளும் யுத்தத்தில் இறங்கியுள்ளன.

கடந்த ஒரு வாரமாக நடந்து வரும் சண்டையில் இரு தரப்பிலும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.இந்நிலையில் தங்களது தாக்குதலில் அஸர்பைஜானின் 3 ஆயிரம் ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக ஆர்மீனியா தெரிவித்துள்ளது.

உயிரிழந்த ராணுவத்தினர் உடல் நாகோர்னோ பகுதியில் சிதறிக் கிடப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போரின்போது எடுக்கப்பட்ட புதிய வீடியோக்களை அஸர்பைஜான் வெளியிட்டுள்ளது.

இதில் ஆர்மீனியாவின் கவச வாகனங்கள், டேங்குகள், வீரர்களின் பதுங்கு குழிகள் போன்றவை குண்டு வீசி அழிக்கப்படுவது பதிவாகி உள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments