வேலூரில் தந்தை -மகள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்: ஒருவன் கைது

0 28262
வேலூரில் தந்தை -மகள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஒருவன் கைது

வேலூரில் தந்தை, மகள் கழுத்தறுக்கப்பட்டு வெட்டிப் படுகொலை செய்யபட்ட சம்பவத்தில், ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

ஜார்தா கொல்லை மலைகிராமத்தை சேர்ந்த பொன்னுசாமியும் அவரது 10 வயது மகள் தீபாவும் அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். பொன்னுசாமிக்கும் அவரது சகோதரி சின்னத்தாயிக்கும் நிலத் தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சின்னத்தாயின் மூத்த மகன் அண்ணாதுரையும் பொன்னுசாமியும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியதாகவும் அப்போது வாய்த் தகராறு ஏற்பட்டு, அண்ணாதுரை மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து வெட்டியதாகவும் கூறப்படுகிறது.

தடுக்க வந்த சிறுமி தீபாவுக்கும் அரிவாள் வெட்டு விழுந்து இறந்ததாகக் கூறப்படும் நிலையில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments