விமானங்களில் பயணிப்போர் எண்ணிக்கை கொரோனா சூழலுக்கு முன்பிருந்த அளவை எட்டும் - விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி

0 801
விமானங்களில் பயணிப்போர் எண்ணிக்கை கொரோனா சூழலுக்கு முன்பிருந்த அளவை எட்டும் - விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி

விமானங்களில் பயணிப்போர் எண்ணிக்கை,  தீபாவளிக்கும் புத்தாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் கொரோனா சூழலுக்கு முன்பிருந்த அளவை எட்டும் என விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 2 வெள்ளிக்கிழமை ஒரே நாளில் இந்தியாவில் ஆயிரத்து 536 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளதாகவும், மொத்தம் ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 601 பேர் பயணம் செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா ஊரடங்குக்குப் பிந்தைய நாட்களை ஒப்பிடும்போது அக்டோபர் இரண்டாம் நாளில் விமானப் போக்குவரத்து அதிகம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

தீபாவளிக்கும் புத்தாண்டுக்கும் இடையில் விமானப் போக்குவரத்து அளவு கொரோனா சூழலுக்கு முன்பிருந்த நிலையை அடையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments