மேரிலாண்டு ராணுவ மருத்துவமனையில் டிரம்ப் அனுமதி…அடுத்த சில நாள்களுக்கு அங்கிருந்தபடியே பணியாற்றுவார் என தகவல்!

0 1281
மேரிலாண்டு ராணுவ மருத்துவமனையில் டிரம்ப் அனுமதி…அடுத்த சில நாள்களுக்கு அங்கிருந்தபடியே பணியாற்றுவார் என தகவல்!

கொரோனா உறுதியாகி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், அடுத்த சில நாள்களுக்கு அங்கிருந்தபடியே பணியாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேரிலான்டில் உள்ள வால்டர் ரீட் தேசிய ராணுவ மருத்துவ மையத்துக்கு ஹெலிகாப்டரில் அழைத்து செல்லப்பட்டு டிரம்ப் அனுமதிக்கப்பட்டார்.

மேரிலான்டு மருத்துவமனையில் டிரம்புக்காக சிறப்பு அறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

லேசான அறிகுறிகள் மட்டுமே இருப்பதால், அடுத்த சில நாள்களுக்கு அங்கு இருந்தபடி டிரம்ப் பணியாற்றுவார் என்று வெள்ளை மாளிகை செய்தித்துறை செயலாளர் கேலெக் மெக்கேனி தெரிவித்துள்ளார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments