தமிழகத்தின் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

0 2880
தமிழகத்தின் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், ஆந்திரா மற்றும் ஒடிசா கடலோர பகுதிகளின் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதாவும், வெப்பச்சலனமும் காணப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனால் அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் 8 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

வடமேற்கு வங்க கடல், அதனை ஒட்டிய ஒடிசா கடல் பரப்பு, அந்தமான் கடல் பரப்பில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments