ஒயர் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து.. 9 மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்த தீயணைப்பு வீரர்கள்

0 911
ஒயர் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து.. 9 மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்த தீயணைப்பு வீரர்கள்

புதுச்சேரி சேதாரப்பட்டு தொழிற்பேட்டையில் செயல்பட்டு வந்த தனியார் ஒயர் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து 9 மணி நேர போராட்டத்திற்கு பிறகு முற்றிலும் அணைக்கப்பட்டது.

Siecham என்கிற ஒயர் தயாரிக்கும் தொழிற்சாலையில் மின்கசிவு காரணமாக அதிகாலையில் கேபிள் தயாரிக்கும் இயந்திரத்தில் தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென தொழிற்சாலை முழுவதும் பரவிய தீ மற்ற இயந்திரங்கள் மீதும் பற்றியது.

முதற்கட்டமாக 5 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடினர். பின்னர், கூடுதலாக 2 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் 9 மணி நேரமாக போராடி ஒரு வழியாக தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments