நடிகர் சுசாந்த் சிங் கொலை செய்யப்படவில்லை என எய்ம்ஸ் அறிக்கை சமர்பித்துள்ளதாக தகவல்

0 1007
நடிகர் சுசாந்த் சிங் கொலை செய்யப்படவில்லை என எய்ம்ஸ் அறிக்கை சமர்பித்துள்ளதாக தகவல்

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் கொலை செய்யப்படவில்லை என எய்ம்ஸ் மருத்துவ நிபுணர் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக சுஷாந்த் சிங் அவரது காதலி ரியா மற்றும் குடும்பத்தினரால், விஷம் கொடுத்தோ அல்லது கழுத்தை நெறித்தோ கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சுஷாந்தின் குடும்பத்தினரும் அவர்கள் தரப்பு வழக்கறிஞரும் சந்தேகம் தெரிவித்திருந்தனர்.

இந்த சந்தேகங்களை முற்றிலும் மறுக்கும் வகையில் அமைந்துள்ள எய்ம்ஸ் நிபுணர் குழுவின் அறிக்கையில், சுஷாந்த் மரணம்  தற்கொலையே என சிபிஐக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனாலும் பீகார் போலீசார் பதிவு செய்த ”தற்கொலைக்கு தூண்டுதல்” எனும் பிரிவிலேயே சிபிஐ அதிகாரிகள் விசாரணையை தொடர்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments