இந்தியாவில் ஸ்புட்னிக்-v கொரோனா தடுப்பூசியின் 3ம் கட்ட பரிசோதனையை மேற்கொள்ள தலைமை மருந்து கட்டுப்பாட்டாளரிடம் கோரிக்கை

0 2191
இந்தியாவில் ஸ்புட்னிக்-v கொரோனா தடுப்பூசியின் 3ம் கட்ட பரிசோதனையை மேற்கொள்ள தலைமை மருந்து கட்டுப்பாட்டாளரிடம் கோரிக்கை

ரஷியாவின் கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக் v-யின் 3ம் கட்ட பரிசோதனையை மேற்கொள்ள, ஹைதராபாத்தை சேர்த நிறுவனம், தலைமை மருந்து கட்டுப்பாட்டாளரிடம் அனுமதி கோரியுள்ளது.

உலகின் முதல் கொரோனா தடுப்பூசியாக அறிவிக்கப்பட்டு, ஸ்புட்னிக் v ரஷியாவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசியை உற்பத்தி செய்வது மற்றும் விநியோகிப்பதற்கான உரிமத்தை ஹைதராபாத்தை சேர்ந்த, டாக்டர் ரெட்டிஸ் ஆய்வக நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

உரிய அனுமதி கிடைத்ததும் இந்தியாவிற்கு 10 கோடி டோஸ் தடுப்பூசி வழங்கப்படும் என ரஷியா அறிவித்துள்ள நிலையில், இந்தியாவில் 3ம் கட்ட பரிசோதைனையை மேற்கொள்ள அனுமதி கோரப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments