ஐபிஎல் : சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றி

0 1586
ஐபிஎல் : சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றி

ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில், 7 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.

டாஸ் வென்று களமிறங்கிய ஐதராபாத் அணியில், வார்னர் 28 ரன்களையும், மணீஷ் பாண்டே 29 ரன்களையும் சேர்த்து வெளியேறினர்.

இறுதிகட்டத்தில் அதிரடியாக ஆடிய ப்ரியம் கார்க் 51 ரன்களையும், அபிஷேக் ஷர்மா 31 ரன்களையும் சேர்க்க, ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்களை சேர்த்தது.

இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை அணியில் அதிகபட்சமாக ஜடேஜா 50 ரன்களை சேர்க்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.

இறுதி வரை போராடிய தோனி 47 ரன்களை எடுக்க, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்களை மட்டுமே எடுத்து சென்னை அணி தோல்வியை தழுவியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments