மொபைல் போன்களின் விலை 3 சதவீதம் வரை உயர வாய்ப்பு

0 1669
மொபைல் போன்களின் விலை 3 சதவீதம் வரை உயர வாய்ப்பு

மொபைல் போன்களின் விலை 3 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளதாக, இந்திய செல்லுலார் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் கூட்டமைப்பின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான அறிவிப்பில், உள்நாட்டு சந்தையில் குறிப்பிட்ட உதிரி பாகங்கள் போதிய அளவு இல்லை என்பதால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் நிலை உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் டிஸ்பிளே அசெம்ப்ளிக்கான இறக்குமதி வரி 10 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதால், மொபைல் போன்களின் விலை 1.5  முதல்  3 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments