லாரி ஓட்டுனர்களின் டீசல் தானம்..! திருடன் கையில் சாவி

0 7308
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே டேங்கர் மற்றும் கண்டெய்னர் லாரிகளை ஓட்டிச்செல்லும் ஓட்டுனர்களே லாரியில் இருந்து டீசலை திருடி பாதி விலைக்கு விற்கும் சம்பவம் அரங்கேறி வருகின்றது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே டேங்கர் மற்றும் கண்டெய்னர் லாரிகளை ஓட்டிச்செல்லும் ஓட்டுனர்களே லாரியில் இருந்து டீசலை திருடி பாதி விலைக்கு விற்கும் சம்பவம் அரங்கேறி வருகின்றது. லாரி உரிமையாளர்களை ஏமாற்றும் ஓட்டுனர்களின் திருட்டுச்செயல் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சுங்கச்சாவடி அருகே புத்துகோவில் பகுதியில் சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையின் இரு மருங்கிலும் உள்ள வல்கனைசிங் மற்றும் டயர் கடைகள் தான் டீசல் திருட்டின் சரணாலயம்.

வல்கனைசிங் கடைகளுக்கு லாரிகளை ஒதுக்கும் ஓட்டுனர்கள் லாரிகளில் இருந்து திருட்டுத்தனமாக குழாய் போட்டு டீசலை உறிஞ்சி காலி தண்ணீர் கேன்களில் நிரப்பி எடுத்துக் கொள்ள அனுமதிக்கின்றனர்.

தற்போது 77 ரூபாய்க்கு விற்கப்படும் டீசலை பாதி விலை கொடுத்து வாங்கும் கடைக்காரர்கள், இந்த திருட்டு டீசலை மணல் கடத்தல் லாரிகளுக்கும், டிராக்டர் மற்றும் ஜேசிபி போன்ற கனரக வாகனங்களுக்கும் லிட்டர் 50 ரூபாய்க்கும் குறைவான விலைக்கு விற்றுவருவதால் அந்த பகுதியில் உள்ள பெட்ரோல் பங்குகளில் டீசல் விற்பனை பாதியாக சரிந்துள்ளதாக கூறப்படுகின்றது.

லாரி உரிமையயாளர்களுக்கு தெரியாமல் நடக்கின்ற இந்த டீசல் திருட்டில் தொலைதூரம் செல்லும் லாரி ஓட்டுனர்கள் 2000 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை கமிஷன் அடித்து விடுவதாக கூறப்படுகின்றது. லாரி உரிமையாளர்களிடம் போக்குவரத்து நெரிசலில் மணிக்கணக்கில் காத்திருந்ததால் டீசல் அதிக அளவு காலியாகி விட்டது என்று கணக்குகாட்டுவதாக கூறப்படுகின்றது.

திருடப்படும் ஆயிரக்கணக்கான லிட்டர் டீசல் பாதுகாப்பின்றி கள்ளத்தனமாக கடைகளில் பதுக்கப்படும் சூழலால் விபத்துக்கள் நேரிட்டால் பெரும் அசம்பாவிதம் நடக்க கூடும் என்பதால் காவல்துறையினர் முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

அதே நேரத்தில் தங்கள் லாரியை ஓட்டிச்செல்லும் டீசல் திருட்டு ஓட்டுனர்களை கண்டறிந்து உரிமையாளர்கள் விழிப்புடன் நடவடிக்கை எடுக்கா விட்டால் ஒரு நாள் லாரியையே பகுதி பகுதியாக கழற்றி விற்றுவிட்டு லாரி முழுவதுமாக களவு போனதாக கைவிரித்துவிட வாய்ப்புண்டு.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments