2 மணி நேரத்தில் கொரோனா சோதனை முடிவை தெரிவிக்கும் கொரோனா கிட்டை வடிவமைத்து வெளியிட்டது ரிலையன்ஸ் நிறுவனம்

0 2184
இரண்டே மணி நேரத்தில் முடிவு தெரியக்கூடிய கொரோனா RT-PCR சோதனை கிட்டை உருவாக்கி உள்ளதாக ரிலையன்ஸ் லைஃப் சயன்சஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இரண்டே மணி நேரத்தில் முடிவு தெரியக்கூடிய கொரோனா RT-PCR சோதனை கிட்டை உருவாக்கி உள்ளதாக ரிலையன்ஸ் லைஃப் சயன்சஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்பொது உள்ள RT-PCR கிட்டுகள் வாயிலாக நடத்தப்படும் கொரோனா சோதனையில் முடிவுகள் தெரிய 24 மணி நேரம் வரை ஆகிறது.

ஆனால் கொரோனா வைரசின் 100 க்கும் மேற்பட்ட மரபுக்கூறுகளை ஆராய்ந்து தனித்துவம் வாய்ந்த தொழில்நுட்ப உதவியுடன் உள்நாட்டில் இந்த கிட் உருவாக்கப்பட்டுள்ளது. 

ரிலையன்சின் துணை நிறுவனமான ரிலையன்ஸ் லைஃப் சயன்சஸ் இந்த கிட்டுக்கு R-Green kit  என்று பெயரிட்டுள்ளது. 

இந்த  சோதனை கிட்டுக்கு இதுவரை ஐசிஎம்ஆர் சான்று  அளிக்கப்படவில்லை என்றாலும் இது கையாளுவதற்கு மிகவும் எளிதானது என்றும்  98.8 சதவிகிதம் துல்லிய முடிவுகளை அளிக்க கூடியது என்றும் ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments