2020ஆம் ஆண்டிற்கான மஹிந்திரா தார் வாகனத்தின் மாடல் அறிமுகம்

0 1522
2020ஆம் ஆண்டிற்கான மஹிந்திரா தார் வாகனத்தின் மாடல் அறிமுகம்

கரடு முரடான மலைப்பகுதிகளில் சுலபமாக ஓடும் மஹிந்திரா தார் வாகனத்தின் 2020 ஆம் ஆண்டிற்கான மாடலை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

AX, AX ஆப்ஷனல் மற்றும் LX என 3 ரகங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த  வாகனத்தின் விலை 9 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் முதல், 13 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முகப்பு விளக்குகள், பம்பர் மற்றும் முன்புற க்ரிலின் தோற்றம் மாற்றப்பட்டதுடன், ஏர்பேக்குகள், ஏபிஎஸ்,  Electronic stability என பாதுகாப்பு அம்சங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

இந்த மாடலின் முதல் வண்டியை டெல்லியை சேர்ந்த Aakash Minda ஒரு கோடியே 10 லட்ச ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளார். அந்த தொகை கொரோனா நிவாரணப்பணிகளுக்கு நன்கொடையாக வழங்கப்பட உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments