அதிபர் டிரம்பிற்கு கொரோனா ஏற்பட்டதன் எதிரொலி : துணை அதிபரிடம் பொறுப்பு வழங்கப்படும் என தகவல்

0 1777

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள டிரம்பிற்கு அதிபருக்கான பணிகளை கவனிக்க இயலாத நிலை ஏற்பட்டால், அதிபர் பொறுப்பு துணை அதிபரான மைக் பென்சிடம் வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கு முன்னர் இரண்டு முறை அமெரிக்க அதிபர்கள் நோய்வாய்பட்ட போது சில மணி நேரம் துணை அதிபரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட சரித்திரம் உள்ளது.

இதற்கன சட்ட திருத்தம் 1963 ல் அதிபர் கென்னடியின் கொலைக்குப் பின்னர் கொண்டுவரப்பட்டது. அதன் பின்னர் 1985 ல் அதிபர் ரொனால்டு ரீகனும், 2002 ல் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷும் சில மணி நேரங்கள் துணை அதிபர்களிடம் பொறுப்பை ஒப்படைத்தனர்.

ஆனால் டிரம்பிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் அவர் குவாரன்டைனில் சென்று உடல் நலம் திரும்பும் வரை பல நாட்கள் துணை அதிபரிடம் பொறுப்பு  போகும் என கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments