மகாத்மா காந்தியின் 152-வது பிறந்தநாளை முன்னிட்டு ஆளுநர், முதலமைச்சர், துணை முதலமைச்சர் மரியாதை

0 1131
மகாத்மா காந்தியின் 152-வது பிறந்தநாளை முன்னிட்டு ஆளுநர், முதலமைச்சர், துணை முதலமைச்சர் மரியாதை

மகாத்மா காந்தியடிகளின் 152- வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது உருவப்படத்திற்கு ஆளுநர், முதலமைச்சர், துணை முதலமைச்சர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதேபோல, காமராஜரின் நினைவு நாளை முன்னிட்டு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

சென்னை காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்ட உருவப் படத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

சர்வோதயா சங்கம் சார்பில் நூற்பு வேள்வி, வழிபாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது காந்திய பாடல்களும் இசைக்கப்பட்டன. இதேபோல, கர்ம வீரர் காமராஜரின் 46வது நினைவு நாளை முன்னிட்டு, சென்னை கிண்டியில் உள்ள காமராஜர் நினைவிடத்தில் அரசு சார்பில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

காமராஜர் உருவப்படத்திற்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பாக, அதிமுக செயற்குழு கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் இந்த இரு நிகழ்ச்சிகளிலும் ஒன்றாகக் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments